சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் அணிக்கு 9 நபர்கள் மற்றும் 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று காலை நடைபெற்றது . இதில் உதய சூரியன் அணியுடன் சைனிங்ஸ் அணி மோதியது.முதலில் ஆடிய உதயசூரியன் அணி 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
உதயசூரியன் அணி சார்பாக லக்ஸ்சன் 18 ஓட்டங்களையும் சைனிங்ஸ் சார்பாக குமரன் ,பிரசாந் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சைனிங்ஸ் அணி 2.1 ஓவர்களில் 51 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.சைனிங்ஸ் அணி சார்பாக அன்பழகன் 24 ,துளசிராம் 16 ஓட்டங்களை குவித்தனர்….