பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து இலங்கைக்கு தமது அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இலங்கை அரச புலனாய்வு துறை ஒட்டுக்கேட்கிறதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் உரையாடுபவர்கள் தொடர்பாக இந்த நகர்வினை அது முடுக்கி விட்டுள்ளது.

இவ்விதம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து இலங்கையில் உள்ள சிலருடன் சிலர் மேற்கொண்ட உரையாடல்களை வைத்து இலங்கை புலனாய்வு துறை சில விடயங்களை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. அவ்விதம் பாதிக்கப்பட்ட நபர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர் .

எனவே மக்களே தேவையற்ற கொடுக்கல் வாங்கல் பிறரை குசலம் விசாரிப்பது மற்றும் நீங்கள் எதிர்காலத்தில் செய்ய போகும் மற்றும் நீங்கள் வாழும் நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக எவையும் இலங்கையில் உள்ள உறவுகளிடம் தொலைபேசி வாயிலாக பேசாதீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *