இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் இருக்காது என தென், மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீட் ரோமினி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் இலங்கை போன்ற நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
எனினும், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பிலான அரசாங்கத்தின் கொள்கைளில் மாற்றம் ஏற்படுமா என்பது பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர அதிகாரி என்ற ரீதியில் யார் ஆட்சி அளித்தாலும் அமெரிக்க ராஜதந்திர விவகாரங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கக் கடமைப்பட்டுள்ளதாக பிளக் தெரிவித்துள்ளா