Search

நமது கிராமங்களின் சிந்தனையும் ஒற்றுமையும் இலட்சியமும் இக்காலத்திற்கு தேவையாகின்றது:- சிறீதரன்MP (படங்கள் இணைப்பு)

பிராந்தியத்தில் மாறிவரும் சூழலின் மத்தியின் இன்று நமது தீர்வுநோக்கி
பயணப்படுகிறோம்
கைதடியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

தைதடி கலைநகர் துர்க்கா சனசமுகநிலைய புதிய கட்டிட திறப்புவிழா
அண்மையில் நடைபெற்றுள்ளது.சனசமுகநிலைய தலைவர் தங்கராசா
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரனும் சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் சி.துரைராசா தென்மராட்சி த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் க.அருந்தவபாலன் கௌரவ விருந்தினரகளாக சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் தி.தர்சினி சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.ஜெகதீசன் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ச.சதங்கராசா கைதடி கிழக்கு கிராஅ அலுவலர் சி.ரவீந்திரன் கைதடி சனசமுக நிலையங்களின் ஒன்றிய தலைவர். இ.கந்தசாமி சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் த.தர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மற்றும் சனசமுநிலைய செயலாளர் தர்சன் உறுப்பினர்கள் மாணவர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு சனசமுகநிலைய

கொடியேற்றப்பட்டு பெயர்ப்பலகையை பா.உறுப்பினர் சி.சிறீதரன் திரைநீக்கம் செய்துவைத்தார்.அத்தோடு புதிய கட்டடித்தினையும் மண்டபங்களையும் சிறப்பு விருந்தினர்கள் நாடாவைவெட்டி திறந்துவைத்தனர்.இங்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்த்துகையில்

இந்த சனசமுநிலையம் இங்கு திறக்கப்பட்டிருப்பது.இந்த கிராமத்தின் அறிவுதேடலையும் இக்கிராமத்தின் ஒருங்கிணைந்த மக்களின் செயலூக்கத்தையும்
எடுத்துக்காட்டுகின்றது.எமது கிராமங்களில் முன்பெல்லாம் சனசமுகநிலையங்களின்
பங்களிப்பு மிகப்பபெரிதாக இருந்தது.

தொலைதொடப்பு வசதிகள் மற்றும்செய்தி ஊடக வளர்ச்சிகள் கிராமங்களை சென்றடையாத காலங்களில் செய்திகளை அறியவும் உலகநடப்புகளை அறிந்துகொள்ளவும் இந்த சனசமுநிலையங்கள் துணையாக இருந்திருக்கின்றன.கலை இலக்கியம் மற்றும் முற்போக்கு சிந்தனைகளின் இயங்குதளமாகவும் இந்த இடம்
அமைந்திருக்கின்றது.

ஆகவே சனசமுநிலையங்களை ஸ்தாபித்தல் அதை தொடர்ந்து இயங்கச்செய்தல் இன்றைய சூழலிலும் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இன்று தொலைதொடர்பு வசதிகள் ஊடகவசதிகள்பெருகியுள்ள நிலையில் சனசமுநிலையங்கள் கிராமிய வாசனையை காப்பாற்றுகின்ற பணியை செய்யவேண்டியவனவாக கடமைப்பட்டுள்ளன.

நமது கிராமங்களின் சிந்தனையும் ஒற்றுமையும் இலட்சியமும் இக்காலத்திற்கு தேவையாகின்றது. இன்று நாம் முக்கியமான பயணத்தில் தமிழர்களாகிய நாம் பயணப்படுகின்றோம்.சர்வதேச மயப்பட்ட எமது இனத்திற்கான பிரச்சனை இன்று பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைபெற்றுள்ளது எமது மண்ணில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்திய வல்லரசின் வெளியுறவு கொள்கைகளிலும் மாற்றத்திற்கான அறிகுறிகள் புலப்பட ஆரம்பித்துள்ளன.

தமிழகத்திலும் இனிவரும் காலங்களில் மிகமுக்கியமான முனைப்புகள்
வெளிப்படுமென எதிர்வுகூறப்படுகின்றன.எனவே இவை எம்மோடு பிணைந்தவையாக இருப்பதால் எமது கொள்கை இலட்சியம் சமுகஒற்றுமை என்பனவும் எமது தீர்வுநோக்கிய பாதைக்கு முக்கியமாக தென்படுகின்றது. நாம் கடந்து வந்த பாதையயை மறந்துவிடாமல் இருப்பதும் இனிவரும் நாட்களுக்கு பலமான ஒன்று.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *