வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை கீழ்ப்பிரிவு மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று (17.02.2015) காலை 9.30 மணிக்கு கணபதி பாலர் பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வல்வெட்டித்துறை தென்கிழக்கு கிராமசேவகர் திரு.ந.சேகர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாலர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலிருந்து மேற்பிரிவு மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு கிழ்ப்பிரிவு மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
இந்தவருடம் 55 மேற்பிரிவு மாணவர்களும், 48 கீழ்ப்பரிவு மாணவர்களுமாக மொத்தம் 103 பாலர்கள் கல்விகற்று வருவதுடன், 5 ஆசிரியர்களும் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.