எங்கள் வீர நெஞ்சைப் பெற்றெடுத்த புனிதத் தாயாவளின் நினைவு நாள்

எங்கள் வீர நெஞ்சைப் பெற்றெடுத்த புனிதத் தாயாவளின் நினைவு நாள்
அன்னையே! எங்கள் அரசனைப் பெற்றெடுத்த புண்ணியவதியே!!
தமிழ் ஈழத்தின் தெய்வமே! உத்தமியே….பத்தினியே
இனி நீ தான் எங்களின் திங்கள் அம்மா!!!
அம்மா! பத்திரமாய் நீ சுமந்த உந்தன்
மணி வயிற்றுச் சித்திரம் தான்
இன்று நித்‌தம் நாம் வணங்கும் குலசாமி!!!
முத்து என்று நீ பத்திரமாய் பிரசவிக்க
அது தத்திப் பாய்ந்து புலியானது….
உன் செல்லப் புலியைச் சல்லடை போட்டுச்
சிங்களக் கூலிகள் தேடித் தேடி வர
நித்தம் உனக்கு தொல்லை என்று உன் பிள்ளைப் புலி
காடும் மேடும் தான் தனது வீடென்று ஓடியது…..
விடை கொடுத்து வழியனுப்பினாலும் எங்கே
என் கடைக்குட்டி வருமா என எத்தனை நாள்
உன் வாசலில் ஏங்கியபடி நின்றிருப்பாய்..
என்ன செய்வாய்.. பெற்ற வயிறல்லவா…
உனக்குப் பிள்ளைப் பாசம்! ஆனால்
உன் பிள்ளைக்கோ….தேசத்தின் பாசம்!
தம்பியான அந்தக் குட்டிப் புலி..அண்ணையாகி..
அனைவருக்கும் அரசனாகியது!!!
ஆனால்……..
இன்றைய உன் நினைவு நாளில் உன்னிடமே அணையிடுகிறோம்
கூட்டி வா தாயே உன் செல்லப் புலியை!!!
-வல்வை சாரதி

Leave a Reply

Your email address will not be published.