Search

கே.பி தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – இரா. சம்பந்தன்

தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக அரசாங்கத்தின் சாதகமான சமிக்ஞையை எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் அனுசரணையுடன் புலம்பெயந்தோருடன் அரசாங்கம் பேசவுள்ளதை அறிந்து தான் ஆச்சரியமடைகின்றேன் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி; இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்வைக்குமாயின், பேச்சுவார்த்தை மேசைக்கு கட்சி வரவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிக்கவும் தயாராக இருக்கின்றோம். ஆனால் வெறுமனே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளதாக அரசாங்கம் கூறுவது சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் தந்திரம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம், அரஙாக்த்திடமிருந்து வெற்று வார்த்தைகளை எதிர்ப்பார்க்கவில்லை. பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான நேர்மையான அணுகுமுறையையும் முழுமனதான ஈடுபாட்டையும் தான் நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

13ஆவது, திருத்தம் நீக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஜாதிக ஹெல உறுமயவும் கூறியுள்ளதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக நான் கண்டிக்கின்றேன். இதுபோன்ற பேச்சுக்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

கே.பி என்பவர் இலங்கையிலும் இந்தியாவிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர். இவரை சர்வதேச பொலிஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இதற்கான அதிகாரமோ தகுதியோ இல்லை. இவர் தமிழ் மக்களின் பிரதிநிதியும் இல்லை.

தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச இவரை ஒரு கருவியாக அரசாங்கம் பயன்படுத்துவதன் பின்னாலுள்ள நியாயம் தனக்கு விளங்கவில்லை என்றும் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *