ஏங்கி ஏங்கியே வாழும்
எங்களின் வாழ்வின் வலியை
ஒற்றை ஆளாய் நின்று
ஓங்கி ஒலித்த எங்கள் மகளே!
குருதியில் நனையும்
எங்களின் அவல வாழ்வை
உருகி உருகிப் பாடிய
ஈழத்துக் குயிலே!
தங்கம் வேண்டாம் என்று
இங்கு ஏங்கும் குழந்தைகளுக்குத்
தாயான இன்னுமொரு தெரசா நீ!
அன்பு கொண்டு அரவணைத்து
ஆதரவாய் வாழ்வது தான் வாழ்க்கை
என்று வழி காட்டி விட்டாய்.
ஈழத்தவர் இப்படித்தான் என்று
உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.
இது போதும் தாயே!
பேரோடும் புகழோடும்
இன்னும் மேலேறி முன்னேறு மகளே!!!
-வல்வை சாரதி