நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் யாழ் கோட்டையை பார்ப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
பெரும்பாலும் தென்னிலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணம் கோட்டை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் வரும் பயணிகள், வடமாகாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிந்துகொள்வதற்கு வசதியாக தேசிய மரபுரிமை அமைச்சு மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் புகைப்படங்கள் கோட்டைக்குள் காட்சிப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோட்டையை பார்வையிடுவதுடன் வடமாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அறியக்கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.