கும்பம் கரைக்கும் இறுதி நாள் நிகழ்வு வல்வையிலும் சகல இடங்களிலும் நடைபெற்றது.

வியஜதசமி தினமான நேற்றையதினம்,  கடந்த  ஒன்பது நாட்களாக வைக்கப்பட்டிருந்த கும்பம் கரைக்கும் இறுதி நாள் நிகழ்வு சகல இடங்களிலும்  நடைபெற்றது.

படத்தில் வல்வை குஷ்சம் சரஸ்வதி கோவிலில் வைக்கப்பட்டிருந்த கும்பம் கரைக்கப்படுவதினைக் காணலாம். இக் கும்பமானது குச்சம் சரஸ்வதி கோவிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வழியாக கொண்டுவரப்பட்டு இறுதில் சைநிங்க்ஸ் கடக்கரையில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் பாடசாலைகளிலும் கும்பம் கரைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
வல்வைசைநிங்க்ஸ் சனசமுகநிலையத்தின் நவராத்திரி வாணிவிழா நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி கிழைமை நடைபெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published.