ஆதிசத்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஒன்பது நபர் கொண்ட விலகல் முறையான உதைபந்தாட்ட சுற்று தொடரின் இன்றைய ஆட்டத்தில் வல்வெட்டித்துறை, வல்வை அணியை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் 5 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வல்வை விளையாட்டுக்கழக வீரர்களுக்கு கோல் போடும் வாய்பு கிடைத்த போதிலும் அவை அவர்களினால் நழுவவிடப்பட்டது. இந்த ஆட்டத்தை பார்பதற்காக வெளி இடங்களிலிருந்தும் வல்வெட்டித்துறையில் இருந்தும் குறிப்பிடக்கூடிய ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். இந்த சுற்று தொடரில் வல்வை விளையாட்டுக்கழகம் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று வல்வை ரசிகர்களை ஓரளவு நம்பிக்கையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.