Search

குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்: ஒஸ்லோ ஆயர் ஒலே கிறிஸ்டியன் எம். குவார்மி (படங்கள் இணைப்பு)

நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உறுதியளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இடம்பெற்ற இலங்கையைச் சேர்ந்த இரு தாய்மாரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றதையடுத்து டொம் தேவாலய நிர்வாகம் மேற்படிபோராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதுடன் தாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தது.

இதன் அடிப்படையில் சம்பந்தபபட்ட இருதாய்மாருக்கு அழைப்புவிடுத்திருந்த டொம் தேவாலயம் மற்றும் ஒஸ்லோ ஆயர் ஆகிய தரப்புகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தையொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

St. Hallvards, Place 3, Egedes Street Bishops office, Oslo என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது லத்விய, சோமாலியா, இந்தியா, பாகிஸ்தான், போலந்து, ரஷ்யா மற்றும் இலங்கையர் என சுமார் 15 பேர் வரையில் கலந்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் டொம் தேவாலய பொறுப்பாளரும் அருட்தந்தையுமான Olav Hatve உம் பங்கு பற்றியிருந்தார். இதன்போது நோர்வே சிறுவர் காப்பகத்தால் குழந்தைகள் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தமது குழந்தைகள் வருடக் கணக்கில் பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆயரிடம் கூறிய பாதிக்கப்பட்ட தரப்பினர் பல்வேறு ஆவணங்களையும் வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் அனைத்துக்கருத்துக்களையும் செவிமடுத்த ஆயர் ஒலே கிறிஸ்டியான் எம்.க்வாமி, குழந்தைகளை தாயிடமிருந்து பிரித்தெடுக்க முடியாது என்றும் அது மனிதாபிமானமற்ற சிறுவர் காப்பகத்தின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் திருப்திகரமற்றவை என்றும் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பதற்கு யாருக்கும் உரிமைகிடையாது என்று தெரிவித்துள்ள ஆயர், இவ்விடயம் தொடர்பில் தமது ஆயர் குழுவுடன் கலந்துகொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்டோரிடத்தில் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை நோர் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கூடிய நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகங்களில் குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்கின்ற வெளிநாட்டு பெற்றோர்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இது டொம் தேவாலயத்தில் இடம்பெற்ற சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் மற்றுமொரு வெளிப்பாடாக உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது அரச மட்ட உயர்பொறுப்பிலுள்ள ஒருவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்து பிரச்சினைகளை கேடற்றிருந்து ஆவணங்களைப் பெற்றுச்சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *