நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(03.03.2015) நடை பெற்ற ஆட்டத்தில் வல்வெட்டி கருணாகரன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய உரேழு றோயல் விளையாட்டு கழகம் 3:2 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆரம்பம் முதல் அனல் பரந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இரண்டு கோல்களை போட்டு கருணாகரன் அணி முன்னிலையில் இருந்தது, பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இறுதி நேரத்தில் 3 கோல்களை போட்டு ரோயல் அணி வெற்றி பெற்றது, கருணாகரன் அணி சார்பாக இளவரசன், கரிகரன் தலா ஒவ்வொரு கொலினையும், ரோயல் அணி சார்பாக கயகோபன், மு.நிதர்சன், si.நிதர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை போட்டனர்,