சென் மேரிஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி…………
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்றுமாலை(10.03) நடை பெற்ற ஆட்டத்தில் இளவாலை யங் கேன்ரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம்3:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. மேரிஸ் அணி சார்பாக யூட், ஜெக்சன்,அன்ரன்சால்ஸ் தலா ஒவ்வொரு கோல்களை யும், கேன்ரிஸ் அணி சார்பாக கலிஸ்டன் ஒரு கோலையும் பெற்றுக்கொண்டார்.
மற்றும் ஒரு ஆட்டத்தில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம் மோதியது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை போட்டன.யங்கம்பன்ஸ் அணி சார்பாக பிரியதர்சன் ஒரு கொலையும், சென்செவியர் அணி சார்பாக நிறோயன் ஒரு கொலையும் பெற்று கொண்டனர்,
பின்னர் தண்ட உதை மூலம் 3:1 என்ற கோல் அடிப்படையில் யங்கம்பன்ஸ் அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது….