வல்வை விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்டரீதியாகவும் வடமராட்சிக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலும் நடாத்திய மென்பந்தாட்ட தொடர்களின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை 15-03-2015 பிற்பகல் 2.30 மணிக்கு வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட போட்டியில் 8 பந்துப் பரிமாற்றங்கள் 8 வீரர்களை கொண்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கொக்குவில் பிரம்படி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சுன்னாகம் காந்தி நியூஸ்ரார் விளையாட்டுக்கழகம் மோதியது. இம்மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சுன்னாகம் காந்தி நியூஸ்ரார் விளையாட்டுக்கழகம் 42 ஓட்டங்கள் கொக்குவில் பிரம்படி விளையாட்டுக்கழகம் 93 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
வடமராட்சிக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட போட்டியில் அணிக்கு 10 பந்துப்பரிமாற்றங்கள் 9 வீரர்களை கொண்ட சுற்றுப்போட்டியில் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் மோதியது. இம்மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் 61 ஓட்டங்கள் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம்103 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.