மின்னொளியில் வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரின்- SUPER 8ல் (18.03.2015 ) மோதிய அணிகள் விபரங்கள் உள்ளே.

மின்னொளியில் வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரின்- SUPER 8ல் (18.03.2015 ) மோதிய அணிகள் விபரங்கள் உள்ளே.

கலைமதி அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றி…………
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்  (18.03.2015)  அன்று மாலை மின்னொளியில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் வெற்றிலைக்கேணி சென் செபஸ்தியன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய நவிண்டில் கலைமதி விளையாட்டு கழகம் 5:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது. கலைமதி அணி சார்பாக பனுப்பிரியன் 3 கோல்களையும், விஜேந்திரன், சந்துரு, தலா ஒவ்வொரு கொலினையும், செபஸ்தியன் அணி சார்பாக சஜித் ஒரு கொலினையும் பெற்றுக்கொண்டார்.

சென் அன்டனிஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி…………
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் (18.03.2015) அன்று மாலை மின்னொளியில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் அதிசக்தி விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டு கழகம் 3:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது. அன்டனிஸ் அணி சார்பாக கஜானன் 2 கோல்களையும், கனிஷ்டன் ஒரு கொலினையும் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.