அனல் பறந்த ஆட்டம், வென்றது கலைமதி. ….
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffn challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் (22.03.2015) அன்று மாலை மின்னொளியில் நடை பெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் உரெழு ரோயல் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது…. இரு அணிகளும் சம பலத்துடன் பலப் பரீட்சை நடத்திக்கொண்டிருந்தன. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தெரிவாகும் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது. ஆரம்பம் முதல் அனல் பறந்த ஆட்டத்தில் கலைமதி அணி வீரன் விஜேந்திரன்(3 வது நிமிடம்) கோல் ஒன்றை போட்டார். பின்னர் ரோயல் அணி சார்பில் கஜகோபன் 7 வது நிமிடத்தில் கோல் ஒன்றை போட அட்டம் சமநிலையில் சூடு பிடித்தது… இடைவேளையின் பின் 27 வது நிமிடத்தில் கலைமதி வீரன் கோல் ஒன்றை போட்டர். பின்னர் இறுதி நேரத்தில் ரோயல் அணி வீரன் கஜகோபன் 42 வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தை சமப்படுத்த ஆட்டம் இறுதியை நெருங்கியது. இறுதி நிமிடத்தில் கலைமதி அணி சார்பில் சத்தியசீலன் ஒரு கோல் போட்டு அதிர்ச்சி அளிக்க கலைமதி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது…
சென் மேரிஸ் 5:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி….
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் (22.03.2015) அன்று மாலை மின்னொளியில்நடை பெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் உடற்கல்வி ஐக்கிய விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழகம் 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது…. மேரிஸ் அணி சார்பில் அன்டன்சால்ஸ் 2 கோல்களையும், நிதர்சன், ஜேனட், ஜுனட் தலா ஒவ்வொரு கோள்களையும் பெற்றுக்கொண்டனர் …..