Search

முள்ளிவாய்க்காலில் இரகசியமாக செயற்ப்படும் இராணுவ புலனாய்வுத் துறையினர்!

முள்ளிவாய்க்கால் மேற்கு மற்றும் அம்பலவன்பொக்கனை முதலிய கிராமங்களில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையில்இலக்கை இராணுவப்புலனாய்வினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை இராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.

இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட மீள்குடியமர்வில் இந்தப் பதிவு நடவடிக்கை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பகுதிகளில் வெளிப்படையாக அறிவித்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளில்ஈடபடவேண்டாம் என்று இலங்கை அரசு அறிவித்ததாக கூறப்படுகிறது.

முன்பு மீள்குடியேற்ற நடவடிக்கையின் பொழுது கிராமசேவையாளர் மத்தியில்இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இரகசியமான முறையில் முள்ளிவாய்க்கால் மேற்கு மற்றும் அம்பலவன்பொக்கனை முதலிய கிராமங்களில் கிராமசேவையாளர்கள் மீள்குடியேற்றப்பதிவை மேற்கொள்ள இராணுவத்தினர் வந்து மக்களை வழமைக்கு மாறாக பதிவு செய்தார்கள்.

இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பதற்றத்தைஉருவாக்கியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *