பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் சிதைத்தது போலவே எமது விடுதலைப் போராட்டத்தையும் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் சர்வதேசம் சிதைத்தது என விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளரும், ஆயுதக்கொள்வனவு முகவருமான கே.பி குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
மகேந்திரா இன்சினியரிஸ் கம்பனி நிறுவனத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்று இன்று மதியம் அரியாலை புங்கன்குளப்பகுதியில் வைத்து கே.பி யினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பலமாக இருந்த காலத்தில் சர்வதேசம் அதனை பேச்சு சிதைத்து. எமது போராட்டமும் அது போலவே பேச்சு வார்த்தை என்ற மேசையில் வைத்து சிதைக்கப்பட்டது.
எந்தவொரு விடுதலைப் போராட்டமும் பேச்சு வார்த்தை என்று வரும் போது ஒரு வருடங்களுக்கு மேலாக இழுக்கப்படக்கூடாது. ஆனால் எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச சதிவலையில் ஐந்து வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டது.
இறுதியாக எமது போராட்டம் சர்வதேச வலையில் சிதைக்கப்பட்டது. எனவே இதிலிருந்து எமது மக்களை வெளியே கொண்டு வரவேண்டும். நான் அரசியலுக்கு வருதை காலமும் மக்களும் தான் தீர்மானிக்க வேண்டும். என்றார்.
கேபி அரச சாட்சி என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இதனைத் தெரிவித்தள்ளார்.
கூடிய பாதுகாப்புடன் முன்பு இரகசியமாக வந்து செல்லும் கே.பி இப்போது சாதாரணமாக எந்தவிதமான ஆடம்பரங்களும் பாதுகாப்பும் இன்றி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.