தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி முன்வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி இறுதி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இந்த விசாரணையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளரும், சட்டத்தரணியுமான வை.கோ. புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி வாதாடுவார் என எதிபார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக நடைபெற்ற மூன்றுநாள் தொடர் விசாரணை கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. இந்த விசாரணைகளில் தமிழக காவல்துறையினர் உட்பட்ட பலர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் புலி உறுப்பினர்களிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.