முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆட்டிலறிகளை மீட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் இன்று அறிவித்துள்ளது.
ஒரு 130 மி.மீ ஆட்டிலறி மற்றும் நான்கு 152 மி.மீ ஆட்டிலறிகளே மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், சக்திவாய்ந்த 120 குதிரைவலுக் கொண்ட இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கடற்புலிகளின் படகு ஒன்றையும் சிறிலங்காப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தரைதட்டியுள்ள ஜோர்தானிய கப்பலுக்கு அருகில் இவை கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், ‘நிலம்’ புயலினால் அவை வெளித் தெரிய ஆரம்பித்ததை அடுத்து அவற்றைத் தாம் மீட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.