இன்று யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தண்ணிர் போத்தலால் தாக்க முற்பட்டார். எம்மைத் தாக்கினால் நாமும் திருப்பித் தாக்குவோம் என்று சிறிதரனும் தெரிவித்ததை அடுத்து கூட்டத்தில் இரு தரப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ்.நல்லூர் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
பலதரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட போது திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்குத் தொடுத்தது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவாதித்திருந்தார்.
குறித்த வழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் யாழ்.மாவட்டத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் வரையான மக்கள் பாதிப்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இக் கூட்டத்தை அரசியல் கூட்டமாக நடத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்ளசிற்கு தனது மேலாதித் தனத்தைக் காட்டுவதற்காக சிறிதரனைப் பேச விடாமல் மறுத்து ஏதேதோ கருத்துக்களை தொடர்ச்சியாக கூறத் தொங்கினார்.
இறுதியில் இயலாமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தண்ணீர் போத்தலை எடுத்து வீச முற்பட்டார். அருகில் இருந்த அதிமேதாதி சில்வஸ்டரின் அதனை தத்துரோவமாக தடுத்து நிறுத்தினார்.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மின்சாரம், விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம், தென்னைப் பயிர்ச்செய்கை, பனை அபிவிருத்தி, மீள்குடியேற்றம் கல்வி, போக்குவரத்து, புகையிரதம், சுகாதாரம், ஆயுள்வேதம் மற்றும் சமுர்த்தி தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சமுர்த்தி திட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்ட்ட போது, சமுர்த்தி திட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக கூட்டத்தில் டக்ளஸ் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தால் தமிழ் மக்களுக்கு நன்மையில்லை. இதனால் தான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று தமிழ் தேசிய கூட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட ஈபிடிபி உறுப்பினர் சந்திரகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினரைத் தாக்குவதற்கு தண்ணீர் போத்தலைத் தூக்கினார் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
பதிலுக்கு நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என்று தமிழ் தேசிய கூட்மைப்பு எம்.பி. க்கள் சந்திரகுமாரை எச்சரித்தனர்.
உடனே கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அச்சுறுத்தும் வகையில் எழுந்து நின்று பெரும் கூச்சலிட்ட வண்ணம் இருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.