வங்கக் கடலில் உருவாகி இலங்கையின் பல பகுதிகளை தாக்கி சேதங்களை உண்டு பண்ணிய புயலுக்கு பல்வேறு பெயர்கள் (நிலாம், நீலம் மற்றும் நிலம்) தமிழ் பத்திரிகைகளில் மற்றும் இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய துணைக் கண்டத்திலிருக்கும் இரு நாடுகள் ஒவ்வுன்றாக பெயிரிடுவது மரபு. இதன் பிரகாரம் இம்முறை பெயர் சூட்டிய நாடு, புயலுக்கு நிலாம் எனப் பெயரிட்டுள்ளது. இப்பெயரானது சில நாடுகளில் பெண்களுக்கு சூட்டப்படுவதாகும். குறிப்பகாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் மிக அதிகளவில் நடைமுறையில் உள்ள ஒரு பெயராகும்,