பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு 04-11-2012 அன்று 02.00மணிக்கு மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்றியத்தலைவர் உரையுடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.இவ் நிகழ்வில் தாயகப்பாடல்களுக்கு நடன நிகழ்வுகளும்,கவிதைகள்,நாடகம் ,பேச்சுக்கள்,ஆண் ,பெண்களின் காராத்தே நிகழ்வுகளும் வல்வை பிரான்ஸ் இணையத்தினரின் துண்டுப்பிரசுரத்தில் அதிஸ்ட நிகழ்வும்,வினாக்களில் மூன்றில் ஒன்று என்ற நிகழ்வும்,பின்னர் கோடைகால விளையாட்டு விழாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும்,தொடர்ந்து வல்வை ஒன்றியத்தில் நான்கு வருடங்கள் பணியற்றியவர்களுக்கான பரிசில்களும்,வல்வை உதைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன,பின்னர் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது .இந் நிகழ்வில் பிரான்ஸ் வாழ் வல்வை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வு இரவு மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post