Search

முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் – பின்னணியில் இராணுவம்!


புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

எனினும் அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களுள் ஒருவர் புனர்வாழ்வின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவ்வகையிலேயே இக்கடத்தல் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஏற்கனவே அரசு கூறிவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட போராளிகளினில் பலர் வன்னியிலும் அதே போன்று யாழ்.குடாநாட்டிலும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த போதிலும் அவர்கள் பற்றி பின்னர் தகவல்கள் ஏதுமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.

அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்கள் பற்றி தகவல்களை வழங்க படைத்தரப்பு தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் விடுதலைப புலிகளது சொத்துக்களை பேணிவருபவர்களே இலக்கு வைக்கப்படுவதாக படைத்தரப்பு கூறிவருகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *