பாக்தாத் : ஈராக்கில் கார் குண்டு வெடித்ததில் 32 பேர் பரிதாபமாக பலியாயினர். ஈராக்கில் தாஜி நகரில் உள்ள ராணுவ முகாமில் நேற்று ஆள்தேர்வு நடைபெற்றது. அதற்காக முகாமின் வெளி கேட் அருகே ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குண்டு திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் 32 பேர் இறந்தனர்.
இறந்தவர்களில் எத்தனை பேர் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்வுக்காக வந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. ஈராக்கில் இதுபோன்ற ஆள் தேர்வு முகாம்களில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.