புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வல்வெட்டித்துறையில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றது.
குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் வல்வெட்டித்துறை முச்சக்கரவண்டி சங்கத்தினால் நடாத்தப்பட்டு வர்த்தகர்களினால் இன்று கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராலமான முச்சக்கர வண்டி சாரதிகளும் வர்த்தகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.இங்கு குறிப்பிடத்தக்கது ஆண்வர்க்கத்தை சேர்ந்த இளஞர்களே இப்போராட்டகளை நடத்தியுள்ளனர் ஆகவே குற்றம் செய்த செய்கின்றர்களே தண்டிக்கபடவேண்டியவர்கள் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தினர் அல்ல