Search

தமிழர்களின் விடிவிற்காக உழைத்த மூத்த போராளி பரிதிக்கு தாயக மக்கள் வீரவணக்கம்


எமது தாயக விடுதலைப்போராட்டம் சர்வேச அளவில் பெருநெருப்பாய் வியாபித்திருக்கும் இவ்வேளையில் அதற்காக புலத்தில் நெடுங்காலமாய் பெரும்பணியாற்றிய சுதந்திரபோராளி

பரிதி நயவஞ்சகத்தனமாகவும் பிரான்சில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.அந்த பெரும்போராளி பரிதிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அறிவகம் தாயக மக்கள் சார்பில் தமது வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட எமது மக்களின் விடுதலைப்பயணம் முள்ளிவாய்க்கால் போரைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக சர்வதேச அளவில் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் இவ்வேளையில் போராளி பரிதி கொல்லப்பட்டிருக்கிறார்.அந்த மாசற்ற மறவனின் சுதந்திர வேட்கையின் முன்பு நிற்க வக்கற்ற மிகவும் கீழ்த்தரமான கோழைகளால் இந்த கொலை நடத்தபட்டுள்ளது.இதன் மூலம் புலத்தில் தமிழர்களின் விடுதலை வீச்;சை நிறுத்தலாமென அந்த வஞ்சகர்கள் கனவுகண்டால் அது தவறு.இனித்தான் அந்த விடுதலை வீச்சு பன்மடங்காக பாய இருக்கின்றது.வஞ்சகர்களும் எமது இனத்துக்குள் இருக்கும் கோடரிகாம்புகளும் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்வது இது முதற்தடவையல்ல.அத்தகைய சந்தர்ப்பங்களின்போது தலைமைகொண்ட மன உறுதியுடனும் அதன் பால் மக்கள் கண்ட ஆறா பயணமும் இனியும் இப்போதும் இச்சந்தர்;ப்பத்திலும் தொடரவேண்டும்.மக்களுக்காக களமாடியும் சிறைசென்றும் தன்னை வதைத்து உழைத்த பரிதி என்ற அற்புதமான பரிதியின் கனவு நிறைவேற பாடுபட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இருந்து பரிதி ஆற்றிய விடுதலைப்பணியை முழு வீச்சோடு புலம்பெயர் மக்கள் தொடரவேண்டும். பரிதியின் மரணமும் சர்வதேசத்தை எம்மை நோக்கி பார்க்க வைத்திருக்கிறது.இந்த நேரத்தில் சோர்ந்துவிடாது பரிதியின் மரணச்செய்தியின் மூலமும் தமிழர்களின் ஆறாத்தாகத்தையும் சொந்த மண்ணில் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் தமிழர்களை கொன்று பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்ற சேதியையும் இந்த சர்வதேசத்திற்கு சொல்வோம் என அறிவகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *