வல்வை கிரிக்கெட் அணி இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. பொலிகைஒற்றுமை வி . கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் 12 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட சுற்று தொடரில் 10.11.2012 இன்று நடைபெற்ற அரைஇறுதியாட்டத்தில் வல்வை வி .கழகத்தை எதிர்த்து உபயகதிர்காமம் வி . கழகம் மோதியது. முதலில் துடுபெடுத்தாடிய உபயகதிர்காமம் வி . கழகம் 12 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை எடுத்தது. 103 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம்இறங்கிய வல்வை வி. கழகம் 7 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை எடுத்து 3 விக்கெட்டினால் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. வல்வை அணி சார்பாக பிரகலாதன் 42 ஓட்டங்களையும் , திபராஜ் 33 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுகொடுத்தனர்.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post