வல்வை நலன்புரிச் சங்கத்தினரின்(ஐ.இ) கோடைவிழா 2015 தொடர்பான பொதுக்கூட்டம்
அன்பார்ந்த பிரித்தானியா வாழ் வல்வை மக்களே எங்கள் பெருமையை உலகறியச் செய்ய ஒன்றினைவோம்.
ஆண்டுதோறும் வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாத்தப்படும் கோடைவிழாவானது இலண்டனில் இன்று நடைபெறும் விழாக்களில் மிகப்பெரும் விழாவாக தனித்துவம் பெற்றுள்ளது. இது இலண்டன் மட்டுமின்றி வல்வையர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரிதாக எதிர்பார்க்கப்படும் ஒரு விழாவாக சிறந்து விளங்குகின்றது. இப் பெருமை இலண்டன் வாழ் வல்வையர்களையே சாரும், ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி கண்டு வரும் எம் கோடைவிழா இவ் வருடம் வல்வை புளூஸின் 25வது வருட நிறைவை முன்னிட்டு மிகச் சிறப்பாக நடத்த நாம் ஆலோசித்திருக்கின்றோம். எனவே எம் விழா தொடர்பான பொதுக்கூட்டத்தில்,எம் விழா மிகச் சிறப்பாக அமைய எமது கருத்துகளை பகிர்ந்து,செயற்பாடுகளையும் பொறுப்பேற்று விழாவை சிறப்பாக நடத்திட அனைத்து வல்வை மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
பொதுக்கூட்டம்
காலம் : 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 7.30 மணிக்கு
இடம் : casuarina tree , 407 London Road, Mitcham, Surrey , CR4 4BG
பொறுப்பாளர் – ரிஷி: 07890185111
செயலாளர் – பகீர் : 07949099256
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)