வல்வை பொது விளையாட்டுஅரங்கத்தில் சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.இதில் வல்வை , நெடியகாடு, விண்மீன் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றிய இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் வல்வை வி .கழகத்தை எதிர்த்து நெடியகாடு இளைஞர் வி . கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை வி .கழகம் 6 :4 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது. இரண்டாவது போட்டியில் வல்வை வி .கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் வி. கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை வி .கழகம் 7 : 3 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது. ஏராளமான ரசிகர்கள் இவ்விரு போட்டிகளையும் கண்டுகளித்து, வீரர்களை உற்சாகபடுத்தினர்.