இலங்கை தொடர்பான உள்ள அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என பாகன் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த அறிக்கையை வாசித்ததன் பின்னர் இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான நிபுணர் குழு விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தாரூஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கை விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யும் வகையில் அறிக்கை அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வார இறுதியளவில் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.