பல கின்னஸ் சாதனைகளைப் புரிந்த வல்வையைச் சேர்ந்த திரு.வி.ஸ்.குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு) வல்வையில் சிலை அமைப்பதற்கான ஆரம்ப முற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் திரு.M .k .சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து வெளியாகும் ‘இந்து’ பத்திரிகைக்கு இது பற்றி அளித்த தகவலில், வல்வை நகரசபையில் இதுசம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சிலை அமைப்பதற்கான பணத்தினை ஆழிக்குமரன் ஆனந்தனின் குடும்பத்தினரிடமிருந்தும் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்தும் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவ மழையின் பின்னர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
மேற்குறிபிட்ட தகவல்கள் எம்மால் உறுதிப்படுத்தப்படுள்ளது.
ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைகளை உள்ளடக்கிய கையெழுத்துச் சஞ்சிகையான ‘அலை ஒளி’ ஒரு சிறப்பிதலாக 1990 ஆம் வருடம் எம்மால் வெளியிடப்பட்டது இங்கு குறிபிடத்தக்கது.