வல்வை வேம்படி உடையாமணலில் இயங்கிவரும் கல்விக் கூடத்தில் ‘கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை’ (Maths workshop) ஒன்று நாளை காலை (18/11/12) 0800 மணிக்கு நடைபெறவுள்ளது. இலவசமாக நடைபெறவுள்ள இக்கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறையில் எந்தவொரு வல்வை மாணவரும் பங்குபெறமுடியும் என அறிவிக்கபட்டுள்ளது.
இப்பயிற்சிப் பட்டறைக்கு பேராசிரியர் திரு.சபாராஜேந்திரன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.
மேற்குறிப்பிட்ட கல்விக் கூடம் சுமார் 3 வாரங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 25 வரையான மாணவர்கள் (கூடுதலானவர்கள் GCE O/L ற்கு தோற்றவுள்ளவர்கள்) தற்போது இதில் கல்வி பயின்று வருவதும் குறிபிடத்தக்கது.