வடமாரட்சியின் நன்னீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படும் நீர்த் தாங்கிகளில் ஒன்று தொண்டமானாற்றில் செல்வச்சந்நிதி கோயிலுக்கு அருகாமையில், ஆற்றங்கரைக்கு எதிர்பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்குரிய நன்னீ ரினை வடமாரட்சி கிழக்கில் இருந்து பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இத்திட்டத்தின் பிரகாரம் வல்வெட்டித்துறையில் பிரதான வீதிகளிலும், மற்றும் பிரதான ஒழுங்கைகளிலும் குழாய்கள் அமைக்கும் பணிகள் பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.