Search

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கோணேஸ் என்ற முன்னாள் போராளியும் ஒருவராவார்வெள்ளை வானில் வந்த படை புலனாய்வாளர்களே மேலதிக விசாரணைகளுக்காக இவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.

கடந்த வியாழக்கிழமை இவரது கடைக்கு சாதாரண உடையில் சென்ற படைபுலனாய்வாளர்கள் கடையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட இவர் எதற்காக கொண்டு செல்லப்பட்டார்கள் என்று தெரிவிக்காத காரணத்தினால் அவரை தந்திரமாக கோவிலில் கதைத்பதாக கூறிவிட்டு நாங்கள் கொழும்பில் இருந்து வந்த புலனாய்வுத்துறை அவரை விசாரணைக்காக கொண்டு செல்கின்றோம் என்று இவரது துணைவிக்கு அறிவித்துள்ளார்கள்.

ஒருபிள்ளையின் தந்தையான இவர் கடந்த காலத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறீலங்காவின் படையினரின் புணர்வாழ்வு முகாமில் இருந்து அண்மையில் விடுதலையாகிய நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த புலனாய்வாளர்கள் பொத்துவில் காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு நான்காம் மாடிக்கு இன்று கொண்டுசென்றுள்ளார்கள். இத்தகவலை இவரது துணைவி அறிவித்துள்ளார்.

அவரை கைதுசெய்துள்ளதற்கான ஆதாரம் என்பதற்கான துண்டு ஒன்றும் இவரது கைது தொடர்பில் மனிதஉரிமைஆணைக்குழுவில் துணைவியாhர் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *