CWN இனது இரண்டாவது கணித கருத்தரங்கு

17.11.2012அன்று சிதம்பரா கல்லூரி நலன் புரிவோரால்  இரண்டாவது பெற்றோருடானான கணித கருத்தரங்கு இம்முறை ஹில்லிங்க்டன் தமிழ் கல்வி கூடத்தில் மிகச் சிறப்பாக நடத்தப் பெற்று அங்குள்ள பெற்றோர் பயனுற்றனர்.

இதில் பல விதமான ஆக்க பூர்வமான சிந்தனைகள் வெளிபடுத்தப் பெற்று அதனை எவ்வாறு இலகுவாக செயற் படுத்த முடியும் என்பது ஆராயப்பட்டது.  குறிப்பாக இந்த 21 ஆம் நூற்றாண்டில் எவ்விதம் எமது நேரத்தை பயனுள்ள வகையில் எமது குழந்தைகளுடன் அவர்களது வளற்ச்சிக்காக  செலவளிக்கலாம் என்பதை கருத்தில் எடுத்தனர்.
மாணவரும் ஆர்வமாக பங்கு கொண்டு ரசித்து சிரித்து பார்த்து மகிழ்ந்தனர்.
இத்துடன் கணிதப் போட்டி 2013 ( 15 June 2013) இலும் பங்கு கொள்ளுவதற்கான படிவங்களை ஏராளமான பெற்றோர் நிரப்பி தம் சிறாரின் முன்னேற்றத்தில் தம் பங்கினை பெற்றோர் வெளிப்படுத்தி உள்ளனர். (இத்துடன் படிவங்கள் இணைத்துள்ளோம், ஈமெயில் இலும் மற்ற பெற்றோர் அனுப்ப வசதியாக. )
இது எமது வருங்கால மாணவர் திறமையாக சித்தியெய்து எம் மண்ணிற்கும் தம் பெற்றோரிக்கும் தமக்கும் பெருமை சேர்ப்பர் என்பதை காட்டுகிறது.
சிதம்பரா கல்லூரி நலன் புரிவோர் இது போன்று ஆக்க பூர்வமான கருத்தரங்குகளை, பயிற்சி பட்டறைகளை தமிழர் வாழும் இடங்களில் நடத்த உள்ளனர்.
இதற்காக எம் பணியில் உதவிபுரிந்த ஹில்லிங்க்டன் தமிழ் கல்வி கூட நிர்வாகிகளுக்கும், பெற்றோருக்கும் எமது நன்றிகளினுடனும், அன்புடனும்

Leave a Reply

Your email address will not be published.