நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான ‘சக்கரவாகப் பட்சி’ யைச் சிறப்பாகக் காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெறவுள்ளது.
சூரன் போரின் பின்னரான முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நாளை வல்வை சிவன் கோவிலில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது