தமிழீழ வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த யாழ் மாவட்ட வல்வெட்டித்துறை மண்ணில் இன்று மாபெரும் புரட்சிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணியளவில் பன்னிருவேங்கைகளின் நினைவுத்தூபி அமைந்துள்ள தீருவில் பகுதியில்( DIALOG ) ‘டயலொக்’ தொலைத்தொடர்பு கோபுரத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மிகவும் கம்பீரமாகப் பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சவுணர்வுடன் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
தமிழினப்படுகொலையாளியான இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயின் பிறந்த தினமான இன்று மேற்குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.