வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே இந்த புலிக்கொடி பறிக்கவிடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் அந்த புலிக்கொடியை அங்கிருந்து அகற்றி சென்றனர்.
புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்த பகுதியில் விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோரின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவத்தினர் இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் தனியார் தொலைக்தொடர்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.