புனே: மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். புனேயில் உள்ள எரவாட சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து கசாப்புக்கு துக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2008 ல் மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் பலியாகினர். மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் கசாப் மட்டுமே பிடிபட்டார். ரயில் நிலையம் , தாஜ் ஓட்டலில் நடந்த தாக்குதலில் ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.