தமது பதவிக்காலத்தில் இலங்கையில் யுத்தத்தை முடிவுறுத்த முடியாமைக்காக வருந்துவதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் டேவிட் மில்லிபாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் உயிரிழந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்த முடியாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறியமை வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.