வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால், இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்றது .
வடமராட்சி வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரிய ஆலோசகர் திரு. அ.மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ஹாட்லி கல்லூரி ஆசிரியர் திரு. இ.மணிவண்ணன், அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆசிரியர் தி’ரு. க. பிரபாகரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டார்கள். இதில் ஏழு அயல் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பற்றினார்கள்.
இக்கருத்தரங்கின் தொடர்ச்சி வரும் புதன்கிழமை வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.