யாழ் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன தாயக விடுதலைப்பாடலுக்கு மாணவர்கள் எழுச்சிகொண்டுள்ளார்கள்(கானொளி)
வரவேற்பு நிகழ்வில் சினிமா பாடல்களும் இடம்பெற்றது. இருந்தபோதும் மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு மெதுவாக ஆடியிருந்தார்கள். பின்னர் ‘இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் ‘என்ற சாந்தன் பாடிய பாடலையும் ‘எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை ‘ என்ற செல்லப்பா பாடிய பாடலையும் ஒலிக்க செய்த போது மாணவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து தமது உள்ளத்தில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
உண்மையிலே யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் மடிந்த போதும் பலகலை மாணவர்கள் தமது உணர்வுகளை மறக்கவில்லை என்பதனை ஒருமுறை எடுத்து காட்டியுள்ளனர். ஒவ்வொரு மாணவ மாணவியின் உள்ளத்திலும் எம் தலைவர் வேண்டும் என்பதை தமது அடிமனதில் உட்கொண்டிருப்பதை வெளிக்காட்டியுள்ளனர். இராணுவ கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளனர்.
இதே உணர்வுகள் ஈழத்தில் உள்ள எல்லா உள்ளங்களிலும் உண்டு ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனுள்ளும் சில துரோகிகள் இந்த நிகழ்வில் விடுதலைப்புலிகளின் பாடல் இடம்பெறுகிறது என்று இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அலுவலகத்திற்கு அழைப்பு எடுத்து நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
புலம்பெயர் உறவுகளே நாங்கள் இங்கு அமைதியாக இருப்பதை கண்டு நீங்கள் சோர்ந்து விடாதீர்கள் சந்தர்ப்பம் வரும்போது நாம் மீண்டும் புயலாகி புலியாகி எழுந்து வருவோம் இதற்கு இந்த வீடியோ சாட்சியாக இருக்கும் அமைதியாக இருப்பதால் அடங்கிவிட்டோம் என்று நினைக்காதீர்கள் ஆர்ப்பரிக்கும் அலைபோல பொங்கி எழுந்து வருவோம்.
செய்திக்காக ஈழத்தில் இருந்து வேந்தன்