கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு வந்து இருந்தார் உகாண்டா ஜனாதிபதி யோவெரி முசிவெனி. தங்குமிடம் மாத்திரம்தான் வேண்டும், தண்ணீர், சாப்பாடு தேவை இல்லை என்று இவரால் முன்கூட்டியே அரச உயர் தரப்பினருக்கு விசேட வேண்டுதல் விடுக்கப்பட்டு இருந்தது. கூடவே சமையல்காரரை அழைத்து வந்து இருக்கின்றார்.
தண்ணீர், மரக் கறி ஆகியவற்றை விமானத்தில் கொண்டு வந்து இருக்கின்றார். ஹில்ரன் ஹோட்டலில் இவருக்கு தங்குமிட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. விமானத்தில் எடுத்து வந்து இருந்த மரக் கறிகளை சமைத்து இவரது சமையல்காரர்தான் கொடுத்து இருக்கின்றார். இவர் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து உள்ளார்.
ஆனால் அலரி மாளிகையில்கூட வாய் நனைக்கவே இல்லை. மரக் கறி சாப்பாட்டுக்காரர் என்பதால்தான் உணவு, தண்ணீர் விடயத்தில் இவர் அவதானமாக நடந்து கொண்டார் என்று சொல்லப்பட்டாலும்கூட உடல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டே இவர் ஜாக்கிரதையாக நடந்து கொண்டார் என்று புலனாய்வு ஊடகவியலாளர்கள் நம்புகின்றார்கள். இவருக்கு பிடித்த விதத்தில் மரக் கறி சமைக்க வேறு யாருக்கும் தெரியாது என்பதால்தான் சொந்தச் சமையல்காரரை அழைத்து வந்திருக்கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்தருக்கு சொல்லி இருக்கின்றார்.