வல்வெட்டித்துறை கடலில் கடற்தொழிலாளர்கள் மோதல் மூவர் காயம்!

யாழ் வல்வெட்டித்துறை கடற்பகுதியில் சிறீலங்கா அரசின் கட்சிசெல்வாக்கினை பயன்படுத்தி றோலர் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிறுகடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல்.

வல்வெட்டிதுறை கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள றோலர் படகு மீனவர்களுடைய அட்டகாசமும் அதிகரித்துள்ளர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை சிறு கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வல்வேட்டித்துறையில் சட்டவிரோத றோலர் படகு மூலம் மீன்படியில் ஈடுபடும் தொழிலாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்களால் வல்வெட்டித்துறைப் காவல்துறை நிலையத்திலும், வடமராட்சி வடக்கு கடற்றொழில் சம்மாசத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்.
இந்திய மீனவர்கள் றோலர் படகு மூலம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்துக் கானப்படுகின்றது. இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மூலம் அண்மையில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்திருத்தனர். ஆயினும் இந்திய றோலர் படகுகளில் அத்துமீறல்கள் நிறுத்தப்படவில்லை.
இது இவ்வாறிருக்க தற்போது வல்வெட்டித் துறையில் உள்ள ஒரு சில கடற்றொழிலாளர்கள் அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி றோலர் படகு மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அக்கடற்பரப்பின் வளம் மிக விரைவாக அழிவடைந்து வருகின்றது. அதே வேளை அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் சிறு தொழிலாளர்களில் இருந்து ஏனைய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அவர்களுடைய வலைகளும் றோலர் படகு மூலம் அழித்தொழிக்கப்படுகின்றது.
நேற்றுக் காலையும் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் றோலர் மூலம் குறிப்பிட்ட சில கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அப்பகுதியில் சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களுடைய வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர். இதற்கு நியாயம் கேட்ட அத் தொழிலாளர்கள் ஊக்கு எனப்படும் கடற்றொழில் ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் நடைபெற்ற இச் சம்பவத்தில் வல்வெட்டித் துறை பகுதியினைச் சேர்ந்த 3 கடற்றொழிலாளர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் ஊறணி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.