நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் குருதிக் கொடை முகாம்,கண்தான முகாம்,பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குதல்,அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது,கலைக்கோட்டுதயம்,தடா.சந்திரசேகர்,ஆவல் கணேசன்,தசரதன்,அமுதாநம்பி,விசயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை மற்றும் சென்னை அரிமா சங்கம் இணைந்து நடத்திய முகாமில் மாநில நிர்வாகிகள் மருத்துவர் ரமேஷ் பாபு,மருத்துவர் இளவஞ்சி,மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன்,அரிமா பொன்.சுந்தர்,அரிமா மு.ப.செ.நாதன் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் ராசன்,சங்கர்,பெரியார் அன்பன்,வாகை வேந்தன்,சோசப்,அரசகுமாரன்,சௌ.சுந்தரமூர்த்தி,ஏழுமலை உள்ளிட்டோர் சென்னையில் துரைப்பாக்கம்,பெருங்குடி,வேளச்சேரி,திருவல்லிக்கேணி,திருவிக நகர்,புளியந்தோப்பு,பெரம்பூர்,மாதவரம்,அம்பத்தூர் போன்ற இடங்களில் நிகழ்சிகளை ஏற்பாடு செய்தனர்,
ஆவல் கணேசன்-செய்தித் தொடர்பாளர்,நாம் தமிழர் கட்சி.