மருத்துவ பீட மாணவர்கள் கைது? பல்கலை வளாகத்தில் பதட்டம் –
கைது செய்யப்பட்ட மருத்துவ பீட மாணவர்கள் கடுமையான எச்சரிக்கையின் பின் படையினரால் விடுவிக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் பல்கலைக்கழக விடுதியில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதன் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த படையினர் மருத்துவபீட மாணவர்கள் சிலரைக் கைதுசெய்து மறைவான இடமொன்றில் வைத்திருப்பதாக பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் பதட்டம் நிலவுவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.