ஈழத்தமிழர் படுகொலையில் சிங்கள அரசுக்கு உதவிய இந்திய அரசு மீது, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்! – வைகோ
என் உயிர் இருக்கும் வரையில் வைகோவுக்கும் தமிழர்களுக்கும் என் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி பாடுபடுவேன்! – இராம் ஜெத் மலானி
டில்லி நிகழ்ச்சியில் பரபரப்பான உரை
‘ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’ என்ற நூலும், குறுந்தட்டும் ஆங்கித்திலும் இந்தியிலும் வைகோவால் தயாரிக்கப்பட்டு, வெளியீட்டுவிழா நேற்
இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையையும், இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினையையும் ஒன்றாக வைத்து அணுகக்கூடாது. இரண்டும் வெவ்வேறான பிரச்சினைகள். காஷ்மீர் மாநிலம் ஒரே அரசாக இருந்தது. இலங்கையில் தமிழர் அரசு வேறு, சிங்களர் அரசு வேறாக இருந்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புச் செய்த காஷ்மீரில் இருந்து வெளியேறிய பின்னரே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் போட்டது. பாகிஸ்தான் வெளியேறவில்லை; பொது வாக்கெடுப்பு நடக்கவில்லை. பிரதமராக இருந்த இராஜீவ்காந்தியை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சுலபமாக ஏமாற்றினார். பிரபாகரனை அரசு விருந்தாளியாக இந்தியாவுக்கு அழைத்துவந்த இராஜீவ்காந்தி, பின்னர் நம்பிக்கை துரோகம் செய்து, இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழர்களைத் தாக்கச் செய்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனைகூட செய்வது இல்லை என்று, தொலைநோக்கோடு முடிவு எடுத்தார். ஆனால், இந்தியாவின் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. ஈழத்தமிழர் படுகொலைக்கு உதவியது மிகவும் கண்டனத்திற்கு உரியது. வைகோ அவர்கள் தமிழர்களுக்காகப் பாடுபடுகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நான் துணையாக இருப்பேன். என் உயிர் உள்ளமட்டும் வைகோவுக்கும், தமிழர்களுக்கும் என்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி பாடுபடுவேன்.நீதி அரசர் இராஜேந்திர சச்சார் உரை…..
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது, அந்த அரசே குண்டுவீசிக் கொன்றது மிகவும் கொடுமை ஆகும். ஐ.நா. மன்றமும் தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லை. குல்திப் நய்யார் உரை…. தங்கள் உரிமைகளுக்காக மக்கள் போராடும்போது, கொடிய அடக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்த நேர்கிறது. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பகத்சிங்கை பயங்கரவாதி என்று குற்றம் சாட்ட முடியுமா? தமிழர்களுக்காக வைகோ பாடுபட்டு வருகிறார்.இந்த நிகழ்ச்சியில், கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், திருச்சி புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எÞ.மோகன், டெல்லி மாநில அமைப்பாளர் பழனிக்குமார், டெல்லிவாழ் தமிழர்களும், மாணவர்களும், பிறமொழி பேசுவோரும் பங்கு ஏற்றனர். அனைவருக்கும் நூலும், குறுந்தட்டும் வழங்கப்பட்டது.

று நவம்பர் 26 ஆம் தேதி மாலையில், புது டெல்லியில், இந்திய இசுலாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் புகழ்மிக்க வழக்கறிஞர் இராம் ஜெத்மலானி தலைமை தாங்கினார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், சிறுபான்மை இசுலாமிய மக்களின் கமிசன் தலைவராக இருந்தவரும், ஈழத் தமிழர் குறித்து டப்ளின் தீர்ப்பு ஆயத்தில் பங்கு ஏற்றவருமான நீதியரசர் இராஜேந்திர சச்சார், நூலையும், குறுந்தட்டையும் வெளியிட்டார். பிரபல எழுத்தாளர் குல்திப் நய்யார் அவர்கள், அதனைப் பெற்றுக்கொண்டார். ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை பேராசிரியர் ஜான் சுந்தர் தொகுத்துத் தந்தார். வைகோ நன்றி உரை ஆற்றினார்.வைகோவின் உரை…
தமிழ் ஈழ விடியலுக்காக வீரம் செறிந்த போரை நடத்திய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுவதும், எதற்கும் அஞ்சாமல் நீதிக்குக் குரல் கொடுக்கும் இராம் ஜெத்மலானி அவர்கள் தலைமை ஏற்பதும், நீதி அரசர் ராஜேந்திர சச்சார், எழுத்தாளர் குல்தீப் நய்யார் ஆகியோர் பங்கு ஏற்பதும் மனதுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைவது ஒன்றே இந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஆகும். அதற்காக, இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு முன்பு, அங்கே இருந்து சிங்கள இராணுவமும், போலிசும் தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்ட சிங்களரும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். அனைத்து நாடுகள் அமைப்பின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். உலகில் பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பில் பங்கு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் இனப் படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசு, சர்வதேச நீதிமன்றக் குற்றக்கூண்டில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இப்படுகொலைக்கு முழுக்க முழுக்க ஆயுதங்களும் பணமும் கொடுத்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சிங்களவருக்கு ஆதரவாக செயல்படச் செய்தும், இந்த இனக்கொலையில் கூட்டுக் குற்றவாளியான, காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசின் மீது, எதிர்காலத்தில் அமையப் போகும் மாற்று அரசு ஒரு விசாரணை ஆணையத்தை ஏற்படுத்தி, இவர்கள் செய்த துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், அம்மாநில மொழிகளில் நூலையும் குறுந்தட்டையும் தயாரித்து, ஈழத் தமிழர் கொடுந்துயரை இந்தியாவிலே உள்ள பல்வேறு தேசிய இன மக்களிடமும் இதுபற்றிய உண்மைகளை அறியச் செய்து, தமிழ் ஈழ விடியலுக்குப் பாடுபட மதிமுக உறுதி பூண்டு உள்ளது. கொலைகார இராஜபக்சேவை இனி இந்தியாவுக்கு வரவழைத்தால், மறுமலர்ச்சி தி.மு.க. பல்லாயிரம் தமிழர்களைத் திரட்டி, பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.
இராம் ஜெத்மலானி உரை…..