பத்திரிகைகள் உங்கள் அரசியல் இலாபத்திற்காக செயற்படுகிறீர்கள் உங்களுக்கு நான் தகவல் தர மாட்டேன் எனக் கூறி தொலைபேசியினைத் துண்டித்துக் கொண்டார் பதில் துணைவேந்தர் வேல்நம்பி.
பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றும் இன்றும் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணையினை அடுத்து 3 மாத விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது மாவீரர் நாளை நடாத்தியமை, சிறி ரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீசினர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த மாணவர்களது கைது தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டனவா?
தற்போதைய நிலவரம் தொடர்பில் அறிவதற்கு பல்கலைக் கழகத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்த யாழ் பத்திரிக்கை ஒன்று முனைந்தது.
அதன்படி துணைவேந்தருடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
அதனையடுத்து பதில் துணைவேந்தர் வேல்நம்பியிடம் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்துக் கேட்ட போது,
நீங்கள் உங்கள் அரசியல் இலாபத்திற்காக செயற்படுகிறீர்கள் நாம் ஒன்று சொல்ல நீங்கள் வேறொன்று எழுதுகிறீர்கள்.
இதனால் உங்களுக்கு மாணவர்களது கைது தொடர்பில் கருத்துக் கூற முடியாது. கூறவும் மாட்டேன் என்று கூறிவிட்டு தொடர்பினைத் துண்டித்துக் கொண்டார்.
மீண்டும் பல முறை முயற்சி செய்தும் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற இந்த நிலமையினை முன்னின்று அவர்களது விடுதலைக்கு முதற்படியாக இருக்கும் இவர்களே இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது. என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.
இதேவேளை யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கொழும்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.